சோயா பீன்ஸ் பிரியாணி

தேவையான பொருட்கள்

  • சோயா பீன்ஸ்
  • சீரக சம்பா அரிசி
  • தக்காளி
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • இஞ்சி-பூண்டு விழுது
  • சிக்கன் மசாலா பொடி
  • பிரியாணி மசாலா பொடி
  • சோம்பு
  • பட்டை
  • லவங்கம்
  • ஏலக்காய்
  • புதினா
  • தயிர்
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்
  • உப்பு
  • நெய்

செய்முறை

குக்கரில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் சோம்பு, பட்டை, லவங்கம், இரண்டு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு ஏலக்காய், ஒரு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின், மூன்று தக்காளி, ஒரு கைப்பிடி புதினா சேர்த்து வதக்கவும்.

பின், ஒரு கப் சோயா பீன்ஸை 1/2 மணி நேரம் ஊற வைத்து சேர்த்து இதனுடன் ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, இரண்டு ஸ்பூன் பிரியாணி மசாலா பொடி மற்றும் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.

இரண்டு கப் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து இதனுடன் சேர்த்து நான்கு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும். இதனை இரண்டு விசில் வரும் வரை சமைக்கவும்.

இறுதியாக, தேவையான அளவு நெய் சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post