முள்ளங்கி பொரியல்

தேவையான பொருட்கள்

  • முள்ளங்கி
  • பெரிய வெங்காயம்
  • தக்காளி
  • காய்ந்த மிளகாய்
  • மிளகாய் தூள்
  • சாம்பார் பொடி
  • தேங்காய்
  • மஞ்சள் தூள்
  • எண்ணெய்
  • கடுகு
  • உப்பு
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு கடாயில் ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, நான்கு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை, ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின், 200 கிராம் பொடியாக நறுக்கிய முள்ளங்கி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

1/2 டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும். இறுதியாக ஒரு கப் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post