முள்ளங்கி குழம்பு

தேவையான பொருட்கள்

  • முள்ளங்கி
  • புளி
  • தக்காளி
  • மஞ்சள் தூள்
  • சாம்பார் பொடி
  • மிளகாய் தூள்
  • உப்பு
  • கடலைப்பருப்பு
  • பெரிய வெங்காயம்
  • காய்ந்த மிளகாய்
  • நல்லெண்ணெய்
  • கடுகு
  • சீரகம்
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • பெருங்காயத்தூள்

செய்முறை

ஒரு கடாயில் 25 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு பெரிய வெங்காயம், இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

பின், 200 கிராம் பொடியாக நறுக்கிய முள்ளங்கி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.

1/2 கப் புளிக்கரைசல், 1/2 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து அதனுடன் 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

Previous Post Next Post