முருங்கைக்காய் கூட்டு

தேவையான பொருட்கள்

  • முருங்கைக்காய்
  • பெரிய வெங்காயம்
  • தக்காளி
  • காய்ந்த மிளகாய்
  • தேங்காய்
  • மிளகாய் தூள்
  • சாம்பார் பொடி
  • மஞ்சள் தூள்
  • கடலைப்பருப்பு
  • கடுகு
  • சீரகம்
  • உப்பு
  • பூண்டு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு கப் துருவிய தேங்காய், இரண்டு பல் பூண்டு, ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைக்கவும்.

கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, நான்கு ஸ்பூன் கடலைப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

ஒரு கப் நறுக்கிய முருங்கைக்காய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி, அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலா, தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் வேக வைக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post