தேவையான பொருட்கள்
- ராகி மாவு
- எள்
- நாட்டுச் சர்க்கரை
- நெய்
- ஏலக்காய் பொடி
செய்முறை
ஒரு கப் ராகி மாவு, 1/4 கப் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு ஆவியில் வேக வைக்கவும்.
1/2 கப் எள் வறுத்து அரைக்கவும்.
பின், வேக வைத்துள்ள ராகி மாவுடன், ஒரு கப் நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும். இதனுடன், அரைத்து வைத்துள்ள எள், 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு பிசைந்து சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
