தேவையான பொருட்கள்
- பொட்டுக்கடலை
- எள்
- வெல்லம்
- நெய்
- ஏலக்காய் பொடி
செய்முறை
கடாயில், ஒரு கப் பொட்டுக்கடலை சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும். மேலும், ஒரு கப் எள் சேர்த்து வறுக்கவும்.
பின், வறுத்து வைத்துள்ள பொட்டுக்கடலை மற்றும் எள் அரைத்து கலந்து கொள்ளவும்.
பாத்திரத்தில், ஒரு கப் வெல்லம், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
அரைத்து வைத்துள்ள மாவுடன் 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடி மற்றும் தயார் செய்து வைத்துள்ள பாகு சேர்த்து நன்கு பிசைந்து சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
