கடலைப்பருப்பு சட்னி

தேவையான பொருட்கள்

  • கடலைப்பருப்பு
  • தேங்காய்
  • பெருங்காயத்தூள்
  • காய்ந்த மிளகாய்
  • புளி
  • பூண்டு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • உப்பு
  • நல்லெண்ணெய்

செய்முறை

ஒரு கடாயில், 25 கிராம் கடலைப்பருப்பு, ஐந்து காய்ந்த மிளகாய், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, இரண்டு பல் பூண்டு மற்றும் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து வறுக்கவும்.

பின், இதனுடன் ஒரு கப் துருவிய தேங்காய், 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், சிறிதளவு புளி, சிறிதளவு கொத்தமல்லி இலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.

இந்த சட்னி சாதத்திற்கு உகந்தது.

Previous Post Next Post