தேவையான பொருட்கள்
- பச்சை மிளகாய்
- புளி
- மஞ்சள் தூள்
- உப்பு
- நல்லெண்ணெய்
- வெல்லம்
- கடுகு
- வெந்தயம்
- கறிவேப்பிலை
செய்முறை
ஒரு கடாயில், 25 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் வெந்தயம், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய 100 கிராம் பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
1/2 டம்ளர் புளிக்கரைசல், ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து இறுகி வரும் வரை நன்கு வதக்கவும்.
