தேவையான பொருட்கள்
- புதினா
- இஞ்சி
- பூண்டு
- சாதம்
- சோம்பு
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- உப்பு
- எண்ணெய்
- முந்தரி
- நெய்
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி, ஒரு ஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு, ஒரு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
1/2 கப் புதினா மற்றும் 10 முந்திரி சேர்த்து வதக்கவும். பின், ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு மற்றும் நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
