தேவையான பொருட்கள்
- பெரிய வெங்காயம்
- தோசை மாவு
- பாசிப்பருப்பு
- சீரகம்
- உப்பு
- இட்லி பொடி
- கொத்தமல்லி இலை
- கறிவேப்பிலை
- நல்லெண்ணெய்
செய்முறை
ஒரு கடாயில், பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், நான்கு ஸ்பூன் பாசிப்பருப்பு, 1/2 ஸ்பூன் சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
ஒரு கப் புளித்த தோசை மாவுடன், வதக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து அதனுடன் சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, இரண்டு ஸ்பூன் இட்லி பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
பின், பணியாரக் கல்லில் நல்லெண்ணெய் சேர்த்து தயார் செய்து வைத்துள்ள மாவை ஊற்றி வேக வைக்கவும்.
