தேவையான பொருட்கள்
- உளுந்து பருப்பு
- வெல்லம்
- ஏலக்காய்
- உலர் திராட்சை
- முந்திரி
- நெய்
- தேங்காய்
செய்முறை
1/2 கப் உளுந்து பருப்பை வறுத்து இரண்டாக உடையும்படி அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில், அரைத்த உளுந்து பருப்பு, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
பின், ஒரு கப் பொடியாக்கிய வெல்லம் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். ஒரு கப் துருவிய தேங்காய் அரைத்து சேர்க்கவும்.
1/4 கப் முந்திரி மற்றும் உலர் திராட்சையை நெயில் வறுத்து சேர்க்கவும். இறுதியாக இரண்டு ஏலக்காயை தட்டிச் சேர்க்கவும்.
