வேர்க்கடலை சட்னி

தேவையான பொருட்கள்

  • வேர்க்கடலை
  • தேங்காய்
  • காய்ந்த மிளகாய்
  • பூண்டு
  • உப்பு
  • கடலைப்பருப்பு
  • எண்ணெய்
  • கடுகு
  • கறிவேப்பிலை

செய்முறை

ஒரு கப் தோல் நீக்கிய வேர்க்கடலை, ஒரு கப் துருவிய தேங்காய், நான்கு காய்ந்த மிளகாய், ஒரு பல் பூண்டு, ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு மற்றும் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.

பின், ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியில் கலக்கவும்.

Previous Post Next Post