வாழைப்பூ பொரியல்

தேவையான பொருட்கள்

  • வாழைப்பூ
  • பெரிய வெங்காயம்
  • கடலைப்பருப்பு
  • பாசிப்பருப்பு
  • கடுகு
  • பச்சை மிளகாய்
  • தேங்காய்
  • உப்பு
  • மஞ்சள் தூள்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்

செய்முறை

கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு ஸ்பூன் பாசிப்பருப்பு, ஒரு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின், ஒரு கப் பொடியாக நறுக்கிய வாழைப்பூ, தேவையான அளவு உப்பு, 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.

இறுதியாக, 1/2 கப் துருவிய தேங்காய் மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post