தேவையான பொருட்கள்
- வாழைப்பூ
- கடலைப்பருப்பு
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- காய்ந்த மிளகாய்
- சோம்பு
- இஞ்சி
- பூண்டு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் சோம்பு, நான்கு பல் பூண்டு, இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து முக்கால்வாசி அளவு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின், இதனுடன் ஒரு கப் சுத்தம் செய்த வாழைப்பூவை பொடியாக நறுக்கி சேர்க்கவும் மேலும் 1/4 கப் பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி, சிறிதளவு கறிவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி இலை, இரண்டு பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பின், சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
