தேவையான பொருட்கள்
- ஆட்டு ரத்தம்
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- தேங்காய்
- மஞ்சள் தூள்
- இஞ்சி-பூண்டு விழுது
- பச்சை மிளகாய்
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
ஒரு கடாயில் 25 மில்லி எண்ணெய் சேர்த்து ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், ஒரு கப் ஆட்டு ரத்தம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பொடிந்து வரும் வரை கிளறவும். இறுதியாக 1/2 கப் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து விடவும்.
