கேரட் பீன்ஸ் பொரியல்

தேவையான பொருட்கள்

  • கேரட்
  • பீன்ஸ்
  • பாசிப்பருப்பு
  • பெரிய வெங்காயம்
  • மஞ்சள் தூள்
  • கருவேப்பிலை
  • தேங்காய்
  • சாம்பார் மசாலா பொடி
  • மிளகாய் தூள்
  • எண்ணெய்
  • கடுகு

செய்முறை

ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு கருவேப்பிலை, நான்கு ஸ்பூன் பாசிப்பருப்பு, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.‌

பின், 200 கிராம் கேரட் பீன்ஸை பொடியாக நறுக்கி சேர்க்கவும், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சாம்பார் மசாலா பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துவிட்டு இதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும். இறுதியாக ஒரு கப் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post