காளான் குழம்பு

தேவையான பொருட்கள்

  • காளான்
  • பெரிய வெங்காயம்
  • தக்காளி
  • தனியா தூள்
  • சோம்பு
  • இஞ்சி-பூண்டு விழுது
  • தேங்காய்
  • மஞ்சள் தூள்
  • கறி மசாலா தூள்
  • பச்சை மிளகாய்
  • மிளகாய் தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய், ஒரு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி, 1/2 ஸ்பூன் சோம்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் 1/2 கப் துருவிய தேங்காய் சேர்த்து அரைக்கவும்.

ஒரு கடாயில் ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது மற்றும் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு கப் காளான் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.

வதங்கிய பின், அரைத்து வைத்துள்ள மசாலா, தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post