தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு
- கடலைப்பருப்பு
- பெரிய வெங்காயம்
- சின்ன வெங்காயம்
- தக்காளி
- புளி
- காய்ந்த மிளகாய்
- அரிசி மாவு
- பூண்டு
- சோம்பு
- சீரகம்
- பெருங்காயத்தூள்
- மஞ்சள் தூள்
- வெந்தயம்
- கடுகு
- தேங்காய்
- கருவேப்பிலை
- சாம்பார் பொடி
- கொத்தமல்லி இலை
- நல்லெண்ணெய்
- உப்பு
செய்முறை
1/2 கப் துவரம் பருப்பு மற்றும் 1/2 கப் கடலைப்பருப்பு 1/2 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் ஒரு பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் சோம்பு, நான்கு காய்ந்த மிளகாய், 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், சிறிதளவு கருவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி இலை, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைக்கவும். அரைத்த பருப்புடன் இரண்டு ஸ்பூன் அரிசி மாவு கலந்து சிறிய உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் ஃப்ரை செய்யவும்.
ஒரு கடாயில் 25 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிந்த உடன், ஒரு கப் சின்ன வெங்காயம், 10 பல் பூண்டு, இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு கைப்பிடி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். இரண்டு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின், ஒரு கப் புளிக்கரைசல், இரண்டு ஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
அதனுடன் 1/2 கப் அரைத்த தேங்காய், தேவையான அளவு உப்பு, மற்றும் தயார் செய்து வைத்துள்ள பருப்பு உருண்டைகளை சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
