உப்பு பருப்பு குழம்பு

தேவையான பொருட்கள்

  • துவரம் பருப்பு
  • தக்காளி
  • எண்ணெய்
  • நெய்
  • பெரிய வெங்காயம்
  • சீரகம்
  • மிளகு
  • பூண்டு
  • கடுகு
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

குக்கரில் ஒரு கப் துவரம் பருப்பு மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விடவும்.

ஒரு கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு, இரண்டு பல் பூண்டு தட்டி சேர்க்கவும். ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்.

வேக வைத்துள்ள பருப்பை மசித்து சேர்த்து இதனுடன் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும்.

பின், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

இறுதியாக நான்கு ஸ்பூன் நெய் மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post