பச்சை பயிறு குழம்பு

தேவையான பொருட்கள்

  • பச்சை பயிறு
  • தக்காளி
  • சின்ன வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • மஞ்சள் தூள்
  • கொத்தமல்லி
  • சீரகம்
  • எண்ணெய்
  • பூண்டு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

குக்கரில் ஒரு கப் பச்சை பயிறு, இரண்டு கப் தண்ணீர், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு தக்காளி மற்றும் இரண்டு பல் பூண்டு சேர்த்து வேக வைக்கவும்.

பின், ஒரு கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய், பத்து சின்ன வெங்காயம், மூன்று பச்சை மிளகாய், 1/2 ஸ்பூன் கொத்தமல்லி, 1/2 ஸ்பூன் சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வேக வைத்துள்ள பச்சை பயிறு சேர்த்து இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து மசிக்கவும்.

Previous Post Next Post