இளநீர் பாயாசம்

தேவையான பொருட்கள்

  • இளநீர்
  • இளநீர் தேங்காய்
  • வெல்லம்
  • ஏலக்காய்
  • தேங்காய்
  • நெய்
  • முந்திரி
  • உலர் திராட்சை

செய்முறை

ஒரு பாத்திரத்தில், ஒரு கப் இளநீர், ஒரு கப் வெல்லம் சேர்த்து சூடாக்கவும்.

பின், ஒரு கப் துருவிய தேங்காயை அரைத்து தேங்காய் பாலை பிழிந்து சேர்க்கவும்.

ஒரு கப் இளநீர் தேங்காயை அரைத்து இதனுடன் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடங்கள் கலந்து விடவும்.

1/4 கப் முந்திரி மற்றும் உலர் திராட்சை நெய்யில் வறுத்து சேர்க்கவும். இறுதியாக இரண்டு ஏலக்காய் தட்டி சேர்க்கவும்.

Previous Post Next Post