தேவையான பொருட்கள்
- பச்சைப்பயிறு
- கத்தரிக்காய்
- சின்ன வெங்காயம்
- தக்காளி
- காய்ந்த மிளகாய்
- மஞ்சள் தூள்
- சாம்பார் பொடி
- கடலைப்பருப்பு
- எண்ணெய்
- கடுகு
- உப்பு
- கருவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- பூண்டு
- தேங்காய்
- எண்ணெய்
- பெருங்காயத்தூள்
செய்முறை
ஒரு கடாயில் ஒரு கப் பச்சைப்பயறு சேர்த்து நன்கு வறுத்து ஆறவைத்து உடைத்து தோலை நீக்கிக் கொள்ளவும்.
பின், ஒரு குக்கரில் உடைத்த பச்சைப்பயிறு, இரண்டு கப் தண்ணீர், ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து இரண்டு விசில் வரை சமைக்கவும்.
ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு கைப்பிடி கருவேப்பிலை, பத்து சின்ன வெங்காயம், இரண்டு பல் பூண்டு சேர்த்து வதக்கவும். பின், இரண்டு தக்காளி மற்றும் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
1/2 கப் பொடியாக நறுக்கிய கத்தரிக்காய், இரண்டு ஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும். இதனுடன் வேக வைத்துள்ள பச்சைப்பயிறை தண்ணீரை வடிக்காமல் சேர்க்கவும். 1/2 கப் துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இறுதியாக 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
