மோர் குழம்பு

தேவையான பொருட்கள்

  • மோர்
  • பூசணிக்காய்
  • தேங்காய்
  • கடலைப்பருப்பு
  • காய்ந்த மிளகாய்
  • பச்சை மிளகாய்
  • சீரகம்
  • எண்ணெய்
  • உப்பு
  • பெருங்காயத்தூள்
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்து அதனுடன் ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு காய்ந்த மிளகாய், 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்த உடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு,‌ இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை, 1/2 கப் பொடியாக நறுக்கிய பூசணிக்காய் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.

பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.

இறுதியாக ஒரு கப் மோர், 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post