முட்டை சில்லி

தேவையான பொருட்கள்

  • முட்டை
  • கடலை மாவு
  • சோள மாவு
  • மைதா
  • தனியா தூள்
  • முட்டை மசாலா பொடி
  • சிக்கன் மசாலா பொடி
  • காஷ்மீரி மிளகாய் தூள்
  • இஞ்சி-பூண்டு விழுது
  • எலுமிச்சை
  • மிளகுத்தூள்
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

ஐந்து முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஆறிய பின், வேக வைத்துள்ள முட்டையை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

இதனுடன், இரண்டு ஸ்பூன் சோள மாவு, இரண்டு ஸ்பூன் மைதா, இரண்டு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் முட்டை மசாலா பொடி, ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு மற்றும் 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post