தேவையான பொருட்கள்
- உளுந்து பருப்பு
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- மிளகு
- சீரகம்
- இஞ்சி
- அரிசி மாவு
- உப்பு
- கருவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் உளுந்து பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் 1/4 டம்ளர் மற்றும் சிறிதளவு இஞ்சி சேர்த்து அரைக்கவும்.
அரைத்த மாவுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று, இரண்டு பச்சை மிளகாய், 1/2 ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் மிளகு, நான்கு ஸ்பூன் அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
தயார் செய்து வைத்துள்ள மாவை வாழை இலையில் வைத்து தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
