தேவையான பொருட்கள்
- பூசணிக்காய்
- அரிசி மாவு
- பால்
- வெல்லம்
- நெய்
- ஏலக்காய்
- முந்திரி
- உலர் திராட்சை
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் துருவிய பூசணிக்காய் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
பின், ஒரு கப் வெல்லம் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
1/2 கப் பால், இரண்டு ஸ்பூன் அரிசி மாவை 1/2 டம்ளர் தண்ணீரில் கலந்து சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
நெய்யில் வறுத்த 1/2 கப் முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்க்கவும். இறுதியாக மூன்று ஏலக்காயை தட்டி சேர்க்கவும்.
