தேவையான பொருட்கள்
- கடலை மாவு
- அரிசி மாவு
- முட்டைக்கோஸ்
- பச்சை மிளகாய்
- மிளகாய் தூள்
- கொத்தமல்லி இலை
- கறிவேப்பிலை
- பெருங்காயத்தூள்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ், 1/2 கப் கடலை மாவு, 1/2 கப் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு பச்சை மிளகாய், 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், சிறிதளவு பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பின், தயார் செய்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
