முட்டை இட்லி


தேவையான பொருட்கள்

  • இட்லி மாவு
  • முட்டை
  • மிளகுத்தூள்
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

நான்கு முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு கலந்து விட்டு தோசை கல்லில் ஊற்றி அதன் மேல், 1/2 ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 ஸ்பூன் உப்பு மற்றும் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைத்து சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

இட்லி பாத்திரத்தில், 1/2 கரண்டி இட்லி மாவு ஊற்றி தயார் செய்து வைத்துள்ள முட்டை துண்டு ஒன்று வைத்து அதன் மேல் 1/2 கரண்டி இட்லி மாவு ஊற்றி வேக வைக்கவும்.

Previous Post Next Post