தேவையான பொருட்கள்
- மைதா
- தேங்காய்
- கடலைப்பருப்பு
- வெல்லம்
- முந்திரி
- ஏலக்காய் பொடி
- எண்ணெய்
- நெய்
- உப்பு
செய்முறை
ஒரு கப் மைதா, ஒரு சிட்டிகை உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பின், ஒரு அடி கனமான பாத்திரத்தில், ஒரு கப் வெல்லம் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
இதனுடன் ஒரு கப் துருவிய தேங்காய், 1/4 கப் வேகவைத்து மசித்த கடலைப்பருப்பு சேர்த்து இறுகும் வரை வேக வைக்கவும். இரண்டு ஸ்பூன் நெய், 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடி, 1/4 கப் முந்திரி சேர்த்து இறக்கவும்.
பின், தயார் செய்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து சதுரமாக தேய்த்து அதன் நடுவில் தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை வைத்து முக்கோணமாக மடித்து எண்ணெயில் பொரிக்கவும்.
