தேவையான பொருட்கள்
- மைதா
- உருளைக்கிழங்கு
- சோம்பு
- பெரிய வெங்காயம்
- கேரட்
- மஞ்சள் தூள்
- உப்பு
- மிளகாய் தூள்
- சிக்கன் மசாலா பொடி
- கறி மசாலா தூள்
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறைசமோசா
முதலில், ஒரு கப் மைதா, தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை, 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். 1/4 கப் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, 1/4 கப் வேகவைத்த கேரட், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
பின், தயார் செய்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து சதுரமாக தேய்த்து அதன் நடுவில் தயார் செய்து வைத்துள்ள மசாலா வைத்து முக்கோணமாக மடித்து எண்ணெயில் பொரிக்கவும்.
