வெண் பொங்கல்

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி
  • பாசிப்பருப்பு
  • மிளகு
  • நெய்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • சீரகம்
  • முந்திரி

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பாசிப்பருப்பு மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.

பின்,‌ ஒரு மணி நேரம் ஊற வைத்த இரண்டு கப் பச்சரிசி, மூன்று கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

அரிசி வெந்தவுடன் ஒரு கடாயில் 25 மில்லி நெய் சேர்த்து நெய் நன்கு காய்ந்தவுடன், இரண்டு ஸ்பூன் சீரகம், 1/2 கப் முந்திரி, இரண்டு ஸ்பூன் மிளகு மற்றும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை நெய்யில் வறுத்து பொங்கலுடன் சேர்க்கவும்.

Previous Post Next Post