பொட்டுக்கடலை உருண்டை

தேவையான பொருட்கள்

  • பொட்டுக்கடலை
  • வெல்லம்
  • ஏலக்காய் பொடி
  • முந்திரி
  • நெய்

செய்முறை

ஒரு கடாயில் இரண்டு கப் பொட்டுக்கடலை சேர்த்து நன்கு வறுத்து அரைக்கவும். பின், அரைத்த மாவை சலித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் வெல்லம், ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.

தயார் செய்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவுடன் 1/4 கப் முந்திரி, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

தயார் செய்து வைத்துள்ள பாகு ஆறிய பின், கொஞ்சம் கொஞ்சமாக பொட்டுக்கடலை மாவுடன் பாகை சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.

Previous Post Next Post