தேங்காய் பால் முறுக்கு

தேவையான பொருட்கள்

  • தேங்காய்
  • அரிசி மாவு
  • கடலை மாவு
  • பொட்டுக்கடலை மாவு
  • எள்
  • நல்லெண்ணெய்
  • வெண்ணெய்
  • எண்ணெய்
  • பெருங்காயத்தூள்
  • உப்பு

செய்முறை

முதலில் ஒரு கப் துருவிய தேங்காய் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து பாலை பிழிந்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் 50 கிராம் அரிசி மாவு, 50 கிராம் கடலை மாவு, 50 கிராம் பொட்டுக்கடலை மாவு, ஒரு ஸ்பூன் எள், 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய், இரண்டு ஸ்பூன் வெண்ணெய், தேவையான அளவு உப்பு மற்றும் தயார் செய்து வைத்துள்ள தேங்காய் பாலை சேர்த்து நன்கு பிசையவும்.

பிசைந்து வைத்துள்ள மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post