முட்டைக்கோஸ் கூட்டு

தேவையான பொருட்கள்

  • முட்டைக்கோஸ்
  • பாசிப்பருப்பு
  • தேங்காய்
  • பட்டை
  • சோம்பு
  • ஏலக்காய்
  • பெரிய வெங்காயம்
  • காய்ந்த மிளகாய்
  • பச்சை மிளகாய்
  • இஞ்சி
  • தக்காளி
  • எண்ணெய்
  • கடுகு
  • உப்பு
  • மஞ்சள் தூள்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு குக்கரில், 1/2 கப் பாசிப்பருப்பு, ஒரு கப் பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் மற்றும் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வரை வேக வைக்கவும்.

ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு பட்டை, ஒரு ஏலக்காய் மற்றும் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

ஒரு கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் சோம்பு, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

இதனுடன் வேக வைத்துள்ள முட்டைக்கோஸ் தண்ணீரை வடிக்காமல் சேர்க்கவும். பின், அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு ஐந்து நிமிடங்கள் வேக வைத்து இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post