தேவையான பொருட்கள்
- முட்டைக்கோஸ்
- தேங்காய்
- கடலைப்பருப்பு
- பாசிப்பருப்பு
- மஞ்சள் தூள்
- காய்ந்த மிளகாய்
- சீரகம்
- பெரிய வெங்காயம்
- எண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் பாசிப்பருப்பு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு பெரிய வெங்காயம், நான்கு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
200 கிராம் பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
பின், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும். இறுதியாக, 1/2 கப் துருவிய தேங்காய் மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
