தட்டைப்பயிறு சாதம்

தேவையான பொருட்கள்

  • தட்டைப்பயிறு
  • அரிசி
  • தக்காளி
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • காய்ந்த மிளகாய்
  • எண்ணெய்
  • கடுகு
  • சீரகம்
  • உப்பு
  • மஞ்சள் தூள்
  • பெருங்காயத்தூள்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

குக்கரில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், நான்கு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின், நான்கு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.

இரண்டு டம்ளர் சீரக சம்பா அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து சேர்த்து அதனுடன் நான்கு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு, ஒரு கைப்பிடி கருவேப்பிலை மற்றும் ஒரு டம்ளர் தட்டைப்பயிறை ஐந்து நிமிடங்கள் வேகவைத்து சேர்த்து இரண்டு விசில் விடவும்.

Previous Post Next Post