அன்னாசி பழம் கேக்

தேவையான பொருட்கள்

  • அன்னாசி பழம்
  • மைதா
  • சர்க்கரை
  • முந்திரி
  • நெய்
  • பால்
  • எண்ணெய்
  • சமையல் சோடா

செய்முறை

ஒரு கப் மைதா, நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து வறுக்கவும்.

மற்றொரு கடாயில், ஒரு கப் துருவிய அன்னாசி பழம், இரண்டு ஸ்பூன் நெய் மற்றும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.

பின், இதனுடன் வறுத்து வைத்துள்ள மைதா, 25 மில்லி எண்ணெய், 1/2 ஸ்பூன் சமையல் சோடா, ஒரு கப் பால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி விடவும். இறுதியாக, 1/4 கப் முந்திரி சேர்க்கவும்.

ஒரு தட்டில் ஊற்றி நன்கு ஆறிய பின் சிறிய துண்டுகளாக வெட்டவும்.


Previous Post Next Post