அவல் கேசரி

தேவையான பொருட்கள்

  • அவல்
  • ரவை
  • சர்க்கரை
  • முந்திரி
  • ஏலக்காய்
  • நெய்
  • கேசரி பவுடர்
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கப் அவல், 1/4 கப் ரவை அதனுடன் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து தனித்தனியே வறுக்கவும். வறுத்து வைத்துள்ள அவலை அரைக்கவும்.

கடாயில், மூன்று கப் தண்ணீர், 1/4 ஸ்பூன் கேசரி பவுடர் சேர்த்து கலந்து விடவும். தண்ணீர் கொதித்த உடன் தயார் செய்து வைத்துள்ள அவல், ரவை மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து இறுகி வரும் வரை கலந்து விடவும். இடையே சிறிதளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும்.

1/4 கப் நெய்யில் வறுத்த முந்திரி, இரண்டு ஏலக்காய் தட்டி சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post