தேவையான பொருட்கள்
- சேமியா
- ஜவ்வரிசி
- சர்க்கரை
- நெய்
- பால்
- ஏலக்காய்
- முந்திரி
- உலர் திராட்சை
செய்முறை
1/4 கப் சேமியா மற்றும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில், வறுத்து வைத்துள்ள சேமியா, 1/4 கப் ஜவ்வரிசி, மூன்று கப் தண்ணீர் சேர்த்து 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.
பின், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இதனுடன் 1/4 கப் முந்திரி மற்றும் உலர் திராட்சை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
இறுதியாக, 1/2 கப் பால் மற்றும் இரண்டு ஏலக்காய் தட்டி சேர்க்கவும்.
