சில்லி இட்லி 65

தேவையான பொருட்கள்

  • இட்லி
  • சோள மாவு
  • கடலை மாவு
  • மைதா
  • தனியா தூள்
  • மிளகாய் தூள்
  • இஞ்சி-பூண்டு விழுது
  • மிளகுத்தூள்
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • கொத்தமல்லி இலை

செய்முறை

மூன்று இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

இதனுடன், இரண்டு ஸ்பூன் சோள மாவு, இரண்டு ஸ்பூன் கடலை மாவு, இரண்டு ஸ்பூன் மைதா, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் தனியா தூள், தேவையான அளவு உப்பு, சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் 1/4 டம்ளர்க்கும் குறைவாக தண்ணீர் சேர்த்து இட்லி பொடியாமல் நன்கு கலந்து கொள்ளவும்.

பின், கடாயில் 250 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் அடுப்பை மெதுவாக வைத்து தயார் செய்து வைத்துள்ள இட்லியை போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post