தேவையான பொருட்கள்
- நாட்டுக்கோழி
- சின்ன வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- தனியா தூள்
- சீரகம்
- மிளகு
- கடுகு
- தேங்காய்
- தக்காளி
- மஞ்சள் தூள்
- இஞ்சி
- பூண்டு
- சோம்பு
- உப்பு
- நல்லெண்ணெய்
- கருவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு கடாயில் ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய், 50 கிராம் சின்ன வெங்காயம், ஒரு சிறிய தக்காளி, நான்கு ஸ்பூன் மிளகு, ஐந்து காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு இஞ்சி, 10 பல் பூண்டு, ஒரு கைப்பிடி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். இறுதியாக இரண்டு ஸ்பூன் தனியா தூள் மற்றும் 1/2 கப் துருவிய தேங்காய் சேர்த்து ஆறவைத்து அரைக்கவும்.
ஒரு மண் பானையில், 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு காய்ந்த மிளகாய், 50 கிராம் சின்ன வெங்காயம், ஒரு கைப்பிடி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
300 கிராம் நாட்டுக்கோழி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும். பின், அரைத்து வைத்துள்ள மசாலா, இரண்டு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதித்தவுடன் அடுப்பை மெதுவாக வைத்து அரை மணி நேரம் வேகவைக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
