தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு
- கடலைப்பருப்பு
- தட்டைப்பயிறு
- சின்ன வெங்காயம்
- சீரகம்
- காய்ந்த மிளகாய்
- பெருங்காயத்தூள்
- மஞ்சள் தூள்
- உப்பு
- சோம்பு
செய்முறை
1/2 கப் துவரம் பருப்பு, 1/2 கப் கடலைப்பருப்பு, 1/2 கப் தட்டைப்பயிறு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
இதனுடன் 100 கிராம் சின்ன வெங்காயம், ஐந்து காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு கைப்பிடி கருவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.
அரைத்து வைத்துள்ள பருப்பை சிறிய உருண்டைகளாக பிடித்து நன்கு வெயிலில் காய வைக்கவும்.
பின், எண்ணெயில் போட்டு பொரிக்கவும். இதனை சாம்பாரிலும் சேர்க்கலாம்.
