தேவையான பொருட்கள்
- ரவை
- பால்
- சர்க்கரை
- நெய்
- முந்திரி
- ஏலக்காய் பொடி
செய்முறை
ஒரு கடாயில் 250 கிராம் ரவையுடன் நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து வறுக்கவும்.
வறுத்து வைத்துள்ள ரவையுடன் 200 கிராம் சர்க்கரை சேர்த்து சிறிதளவு அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடி, 50 கிராம் முந்திரி, நான்கு ஸ்பூன் நெய், 250 மில்லி காய்ச்சிய பால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து விடவும். இதனை சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
