மலபார் சிக்கன் பிரியாணி

தேவையான பொருட்கள்

  • சிக்கன்
  • சீரக சம்பா அரிசி
  • பச்சை மிளகாய்
  • பெரிய வெங்காயம்
  • தக்காளி
  • புதினா
  • கொத்தமல்லி இலை
  • தேங்காய் எண்ணெய்
  • சோம்பு
  • தயிர்
  • எலுமிச்சை
  • பட்டை
  • இலவங்கம்
  • கல்பாசி
  • கறி மசாலா தூள்
  • சிக்கன் மசாலா பொடி
  • இஞ்சி-பூண்டு விழுது
  • பிரியாணி மசாலா பொடி
  • தேங்காய் பால்
  • உப்பு

செய்முறை

குக்கரில், 25 மில்லி தேங்காய் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பட்டை, சிறிதளவு கல்பாசி, இரண்டு இலவங்கம், இரண்டு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி புதினா சேர்த்து வதக்கவும்.

பின், ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன், 250 கிராம் சிக்கன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, நான்கு ஸ்பூன் தயிர், இரண்டு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், 1/2 கப் தேங்காய் பால் சேர்த்து பத்து நிமிடங்கள் வதக்கவும்.

இரண்டு கப் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து இதனுடன் சேர்க்கவும். மேலும், நான்கு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை சேர்த்து இரண்டு விசில் விடவும்.

Previous Post Next Post