மாங்காய் சாதம்

தேவையான பொருட்கள்

  • மாங்காய்
  • பெரிய வெங்காயம்
  • கடுகு
  • சீரகம்
  • சாதம்
  • கடலைப்பருப்பு
  • உளுந்தம் பருப்பு
  • காய்ந்த மிளகாய்
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • நல்லெண்ணெய்
  • உப்பு

செய்முறை

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் உளுந்தம் பருப்பு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, நான்கு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு பெரிய வெங்காயம், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

பின், 1/2 கப் தோல் நீக்கி துருவிய மாங்காய், 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.

இதனுடன், ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post