சிக்கன் சுக்கா வறுவல்

தேவையான பொருட்கள்

  • சிக்கன்
  • பெரிய வெங்காயம்
  • தக்காளி
  • பச்சை மிளகாய்
  • இஞ்சி-பூண்டு விழுது
  • மிளகுத்தூள்
  • மிளகாய் தூள்
  • சிக்கன் மசாலா பொடி
  • மஞ்சள் தூள்
  • நல்லெண்ணெய்
  • உப்பு
  • கடுகு
  • சீரகம்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு கடாயில், 25 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, நான்கு பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், 400 கிராம் பொடியாக நறுக்கிய சிக்கன் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும். அடுப்பை மெதுவாக வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 மணி நேரம் வேக வைக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

இறுதியாக ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் ஒரு கைப்பிடி கொத்தமல்லி சேர்க்கவும்.

Previous Post Next Post