மட்டன் சுக்கா வறுவல்


தேவையான பொருட்கள்

  • மட்டன்
  • கொத்தமல்லி
  • சோம்பு
  • பட்டை
  • இலவங்கம்
  • கல்பாசி
  • பெரிய வெங்காயம்
  • இஞ்சி-பூண்டு விழுது
  • தக்காளி
  • காய்ந்த மிளகாய்
  • கறி மசாலா தூள்
  • மிளகாய் தூள்
  • மஞ்சள் தூள்
  • மிளகு
  • உப்பு
  • நல்லெண்ணெய்
  • கறிவேப்பிலை
  • புதினா
  • கொத்தமல்லி இலை
  • கடுகு

செய்முறை

300 கிராம் மட்டனை சிறிய துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு இரண்டு விசில் விட்டு எடுக்கவும்.

ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய், ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு பட்டை, இரண்டு இலவங்கம், சிறிதளவு கல்பாசி, நான்கு காய்ந்த மிளகாய், இரண்டு ஸ்பூன் கொத்தமல்லி, இரண்டு ஸ்பூன் மிளகு சேர்த்து வறுத்து அரைக்கவும்.

மற்றொரு கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு கைப்பிடி புதினா, ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின், ஒரு சிறிய தக்காளி, 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கலக்கவும். வேக வைத்துள்ள மட்டன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post