தேவையான பொருட்கள்
- சிக்கன்
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- தக்காளி
- பட்டை
- சோம்பு
- கறி மசாலா தூள்
- மிளகாய் தூள்
- மிளகுத்தூள்
- தனியா தூள்
- தேங்காய்
- இஞ்சி-பூண்டு விழுது
- நல்லெண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு கடாயில், 25 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு பட்டை, இரண்டு பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.
200 கிராம் சிக்கன் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
ஒரு கப் துருவிய தேங்காய், 1/2 ஸ்பூன் சோம்பு, 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து சிக்கனுடன் சேர்த்து இதனுடன் மேலும் 1/2 டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
