பிரட் அல்வா

தேவையான பொருட்கள்

  • பிரெட்
  • எண்ணெய்
  • நெய்
  • முந்திரி
  • உலர் திராட்சை
  • சர்க்கரை

செய்முறை

முதலில் பத்து பிரட் துண்டுகள் எடுத்து அதன் நான்கு புறமும் வெட்டி எடுக்கவும்.

ஒரு கடாயில் 150 மில்லி எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் தயார் செய்து வைத்துள்ள பிரட் துண்டுகளை அதில் போட்டு பொன்னிறமாக ஃப்ரை செய்யவும்.

பின், ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து அதனுடன் ஒரு கப் சர்க்கரை மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்கு கொதிக்க வைக்கவும்.

பொரித்து வைத்துள்ள பிரட் துண்டுகளை சேர்த்து பொடியும் வரை அடுப்பை மெதுவாக வைத்து நன்கு கலந்து விடவும்.

இறுதியாக 1/2 கப் நெயில் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்க்கவும்.

Previous Post Next Post