உளுந்து பருப்பு பாயாசம்

தேவையான பொருட்கள்

  • உளுந்து பருப்பு
  • வெல்லம்
  • பால்
  • தேங்காய்
  • அரிசி
  • ஏலக்காய்
  • முந்திரி
  • உலர் திராட்சை
  • நெய்

செய்முறை

1/4 கப் உளுந்து பருப்பு, இரண்டு ஸ்பூன் அரிசி சேர்த்து வறுத்து அரைக்கவும்.

பாத்திரத்தில், இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அரைத்து வைத்துள்ள உளுந்து பருப்பு சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.

பின், ஒரு கப் வெல்லம் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும். இதனுடன், ஒரு கப் துருவிய தேங்காய், நெய்யில் வறுத்த 1/4 கப் முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கலந்து விடவும்.

இறுதியாக, 1/4 கப் பால் மற்றும் இரண்டு ஏலக்காய் தட்டி சேர்க்கவும்.

Previous Post Next Post